அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்  கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 5 Aug 2018 4:00 AM IST (Updated: 5 Aug 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசும் போது கூறியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு பணிகள், சமுதாய கழிப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணிகளில் அதிக கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவும், தெருவிளக்குகளை மாலை நேரங்களில் ஆய்வு செய்து உடனடியாக பழுது நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார வளாகங்கள் பராமரிப்புகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

சாலை வசதி

ஊராட்சி பகுதிகளிலும் இந்த பணிகளை மேற்கொள்வதுடன் கிராமங்களின் இணைப்பு சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்து, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் இந்த பணிகளை முழுமையாக ஆய்வு செய்து வாரம் ஒரு முறை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விரைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அடிப்படை தேவைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் கோவிந்தராசு (திருச்செந்தூர்), விஜயா (கோவில்பட்டி), பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story