கிருஷ்ணகிரியில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


கிருஷ்ணகிரியில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:15 AM IST (Updated: 5 Aug 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட கோரியும், அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும் வருகிற 7-ந் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி டவுன் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்றம் சங்கம், சி.ஐ.டி.யு. சார்பில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணை பொதுச் செயலாளர் முருகன், மத்திய சங்க செயலாளர் ராஜேந்திரன், செயலாளர் வரதராஜன், தலைவர் சிவக்குமார், பொருளாளர் பார்த்தீபன், சி.ஐ.டி.யு. சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது, மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க கட்டண வசூலை கைவிட வேண்டும். கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்க கூடாது என வலியுறுத்தி பேசப்பட்டன. 

Next Story