பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் அறிவுரை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை 100 சதவீதம் தவிர்த்திட அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதியேற்று பணியாற்ற வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் விழிப்புணர்வு பதாகைகள், துண்டு பிரசுரங்கள் வைக்க வேண்டும்.
குறிப்பாக அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட அலுவலகம் என்று அறிவிப்பு பலகை வைத்து அலுவலகத்துக்கு வரும் அனைத்து அலுவலர்கள், பொதுமக்கள் முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தக்கூடாது. அவர்களுக்கு இதுதொடர்பாக அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முன்னேற்பாடுகள் குறித்து அடுத்த கூட்டத்துக்குள் அனைத்துதுறை அதிகாரிகளும் அறிக்கை தயார் செய்து அளிக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் அனுமதி பெற்ற மற்றும் அனுமதிபெறாத நிறுவனங்கள், குடோன்கள் குறித்த தகவல்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் உற்பத்தி தொழிற்சாலைகள் குறித்த அனைத்து தகவல்களையும் தயார் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர்கள் பன்னீர்செல்வம் (வாணியம்பாடி), பாரதிதாசன் (வேலூர்), முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜான்மில்டன் பிரபு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story