மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; பேரூராட்சி ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; பேரூராட்சி ஊழியர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2018 2:16 AM IST (Updated: 5 Aug 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் பலியானார்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் சின்னநாரசம்பேட்டை தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37). இவர் உத்திரமேரூர் பேரூராட்சி நீரேற்றும் நிலையத்தில் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் அவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். உத்திரமேரூரை அடுத்த ஆனைப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகிறார்.

மற்றொரு விபத்து

உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (35). அவரது மனைவி மாலா (30). இவரது குழந்தை இந்திரா பிரியதர்ஷினி (1½). இவர்கள் 3 பேரும் உத்திரமேரூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். பாப்பாங்குளம் அருகே செல்லும் போது தனியார் பள்ளி வேன் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தை இந்திரா பிரியதர்ஷினிக்கு கால் முறிந்தது. மாலாவுக்கு கை முறிந்தது. இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story