அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 13–ந் தேதி கர்நாடகம் வருகை பீதர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 13–ந் தேதி கர்நாடகம் வருகை பீதர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 5 Aug 2018 3:30 AM IST (Updated: 5 Aug 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வருகிற 13–ந் தேதி கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். அவர் பீதரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

பீதர்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வருகிற 13–ந் தேதி கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். அவர் பீதரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

ராகுல்காந்தி 13–ந் தேதி வருகை

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு கர்நாடகத்திற்கு ராகுல்காந்தி வருவது தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்த நிலையில், வருகிற 13–ந் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகம் வருகை தர உள்ளார். அன்றைய தினம் பீதர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பேசுகிறார்.

கூட்டணி குறித்து ஆலோசனை

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு ராகுல்காந்தி கர்நாடகம் வருகை தர உள்ளதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு(2019) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Next Story