திருவானைக்காவலில் ரெயில்வே மேம்பால பணிக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் வீடு, கடைகள் இடிப்பு
திருவானைக்காவலில் ரெயில்வே மேம்பால பணிக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடு, கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர்.
ஸ்ரீரங்கம்,
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பழைய ரெயில்வே மேம்பாலம் இருந்தது. இப்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ரூ.47.3 கோடி செலவில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய ரெயில்வே மேம்பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தின் கீழேயும், மறுபுறமும் ரூ.3 கோடியில் மண்பாதைகள் சரிசெய்யப்பட்டன.
தண்டவாளத்தின் கீழே உள்ள சுரங்கப்பாதையில் தலா 45 டன் எடையுள்ள 52 பெரிய அளவிலான கான்கிரீட் சிலாப்புகள் பொருத்தப்பட்டன. இதன் பின் சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல இருவழி பாதை அமைக்கப்பட்டது. இதில் பஸ், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன.
பின்னர் பழைய ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு மாம்பழச்சாலை- திருவானைக்காவலை இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணிகள் சமீபத்தில் முடிந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த புதிய பாலத்தின் டிரங்க் ரோடு பகுதியில் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள வீடு, கடைகளை காலி செய்யும்படி நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனால் யாரும் காலி செய்யவில்லை. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து பாலப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த வீடு, கடைகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோட்டை உதவி கமிஷனர் கோடிலிங்கம், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், ஞானசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள எளமணம் பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை யினரால் சாலையோரங் களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பலர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதில் எளமணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கட்டிடம் பாதி அளவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்ததை அடுத்து அந்த கட்டிடத்தின் பாதி பகுதியையும் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக புத்தாநத்தம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story