பெண் தொழிலாளி கொலை: ‘எனது தந்தையுடன் உல்லாசமாக இருந்ததால் எரித்து கொன்றேன்’ வாலிபர் வாக்குமூலம்
எனது தந்தையுடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரத்தில் துப்புரவு பெண் தொழிலாளியை எரித்து கொன்றேன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எடப்பாடி,
சேலம் மாவட்டம், பூலாம்பட்டியை அடுத்த சித்தூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 57). இவருடைய மனைவி வள்ளி(45). இவர் சித்தூர் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ராமர் ஜெயலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ராமரின் தம்பி நாகராஜ் (49). தன்னுடைய மனைவி இறந்ததால் நாகராஜ் தனது கண்பார்வையற்ற மகள் வசந்தா(30), மகன் மணி(28) உடன் அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளி வீட்டில் தீயில் கருகி இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையை தொடர்ந்து துப்புரவு பெண் தொழிலாளி வள்ளியை கொன்றதாக மணியை போலீசார் கைது செய்தனர். மணி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
எனது தந்தை நாகராஜூக்கும், பெரியம்மா வள்ளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. பலமுறை தந்தையை கண்டித்து விட்டேன். சம்பவத்தன்று இரவு வீட்டுக்குள் நானும், அப்பாவும் தூங்கினோம். வீட்டு வராண்டாவில் கட்டிலில் பெரியம்மா வள்ளியும், தரையில் வசந்தாவும் படுத்து தூங்கினார்கள். நள்ளிரவு வீட்டை விட்டு வெளியே வந்தேன். அப்போது தந்தை நாகராஜ், பெரியும்மாவுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தேன்.
எவ்வளவு முறை கூறியும் தந்தையும், பெரியம்மாவும் திருந்தவில்லையே என்று மனம் வருத்தம் அடைந்த நான் வீட்டுக்குள் சென்று மண்எண்ணெய் கேனை எடுத்து கொண்டு வெளியே வந்தேன். என்னை பார்த்ததும் தந்தை நாகராஜ், மகள் வசந்தாவை அழைத்து கொண்டு வெளியே ஓடி விட்டார். ஆத்திரத்தில் இருந்த நான், பெரியம்மா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டேன். இதில் உடல் கருகிய அவர் இறந்து விட்டார். பின்னர் குடும்ப மானம் கருதி யாரோ மர்ம ஆசாமி தீ வைத்ததாக கூறினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் சிக்கி கொண்டேன்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story