அன்று: கிராமத்து மாணவர்கள் இன்று: தேசிய வீரர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கூடைப்பந்தாட்ட வீரர்-வீராங்கனைகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமம்தான் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களை உருவாக் கிக்கொண்டிருக்கிறது. அதற்கான பயிற்சி களமாக அங்குள்ள நாடார் சுந்தர விசாலாட்சி வித்யசாலா மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக கூடைப்பந்தாட்ட பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் கள் கூடைப்பந்தாட்டத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி வழங்குகிறார்கள். இங்கு படித்த மாணவர் கூடைப்பந்தாட்ட வீரராகி, இப்போது இதே பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரது பெயர் செந்தில்குமார். 45 வயதாகும் இவர் கூடைப்பந்து போட்டியில், கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சிறந்த வீரர்களாக உருவாக்கி வருகிறார்.
செந்தில்குமாருடன் நமது கலந்துரையாடல்:
கூடைப்பந்து போட்டியில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
‘‘இந்த பள்ளியில் 1950-ம் ஆண்டு பணி புரிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜீ, கூடைப்பந்தாட்டத்தை முதன் முறையாக பயிற்றுவித்தார். அதன் பின்பு வந்த உடற்கல்வி ஆசிரியர் களான கேசவ மூர்த்தி, ஜெய சீலன், தங்க மணி ஆகியோரும் இடை விடாமல் மாணவர் களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி வழங்கினார்கள். அதனால் இந்த ஊரில் இருந்து சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் உருவாக தொடங்கினார்கள். நான் பள்ளியில் பயின்ற காலத்தில் சீனியர் மாணவர் கள் விளையாடியதை பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. முறையான பயிற்சி பெற்று பள்ளிகள் அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். எனினும் என்னால் பெரிய அளவில் சாதிக்கமுடியவில்லை. பள்ளி பருவத்தில் பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாததை எண்ணி வருத்தப்பட்டேன். ‘நம்மால் கூடைப்பந்தாட்டத்தில் ஜொலிக்க முடியாவிட்டாலும் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக சேர்ந்து சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்ற லட்சியம் உருவானது. நான் ஆசைப்பட்டது போலவே இதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது’’
பயிற்சியாளராக உங்கள் சாதனையில் குறிப்பிடத்தக்கவை?
‘‘இங்கு 2000-ம் ஆண்டு முதல் கூடைப்பந்தாட்டப் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறேன். 2005-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குனரும், கூடைப்பந்தாட்ட பயிற்சியாளருமான சத்தியசீலன் வழி காட்டுதலின்படி பள்ளி மைதானத்தில் காலை, மாலை வேளைகளில் 10 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவி களுக்கு இலவச பயிற்சியளிக்கும் திட்டம் உருவானது. இதற்காக பள்ளி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி பயிற்சி வழங்கியது. இதில் சேர்ந்து பயிற்சி பெற்ற 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் தமிழக அணிக்காக கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளனர். 2010-ம் ஆண்டு 17-வயதுக்கு உட்பட்டோருக்கான குடியரசு தின விளையாட்டு போட்டியில் மாநில அளவில் முதலிடமும், 2012-ம் ஆண்டு 19-வயதுக்கு உட்பட்டோருக்கான பாரதியார் தின மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடமும் பெற்றது மறக்கமுடியாத நிகழ்வு.
இந்த பள்ளியில் கூடைப்பந்தாட்டத்தில் பயிற்சி பெற்ற ஏராளமான மாணவர்கள் விளையாட்டு இடஒதுக்கீட்டில் கல்லூரி படிப்பை முடித்து வங்கி, ரெயில்வே, ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். ஜீவானந்தம் என்ற முன்னாள் மாணவர் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று விளையாடினார். மற்றொரு முன்னாள் மாணவரான காசிராஜன் இந்தோனேசியாவில் நடந்த ஆசிய போட்டிகளுக்கான தகுதி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
தற்போது மாணவி நீட்டா, 16-வயதுக்கு உட்பட்டோ ருக்கான கூடை ப்பந்தாட்ட போட்டியிலும், மற்றொரு மாணவி பவனாம் பிகை 13-வயதுக்கு உட்பட் டோருக் கான கூடைப்பந்தாட்ட போட்டியிலும் தமிழக அணி சார்பில் விளையாடியுள்ளனர். இப்படி நிறைய சாதனைகளை பட்டியலிடலாம். தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜசோழன் ஊரக கூடைப்பந்தாட்ட முன்னேற்ற கழகம் சார்பில், கிராமப்புறங்களில் கூடைப்பந்தாட் டத்தை சிறப்பாக பயிற்றுவித்ததற்காக ஜே.ஏ.தாஸ் தேசிய விருதை எனக்கு வழங்கினார்கள். இது மேலும் பல வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது’’
மாணவர்களுக்கு எத்தகைய பயிற்சிகளை வழங்குகிறீர்கள்?
‘‘வேகமாக ஓடுவதற்காக தடகள விளையாட்டுகள், பெண்கள் பந்தை வேகமாக ‘பாஸ்’ செய்வதற்காக உடற்திறனை வளர்க்கும் பயிற்சிகள், தடை ஓட்டம், ஏணி பயிற்சி, பாராசூட் பயிற்சி, மலையேற்ற பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இந்த இலவச பயிற்சியை மாணவ, மாணவிகள் தொடர்ந்து பெறுவதற்கு பள்ளி நிர்வாகம் பக்கபலமாக இருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகமும் தொடர்ந்து ஊக்கப் படுத்தி வருகிறது. சக பயிற்சியாளர் கணேஷ்குமாரும் உதவுகிறார். பெற்றோரும் நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்கள்” என்றார்.

Related Tags :
Next Story