முன்விரோதத்தில் வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது


முன்விரோதத்தில் வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 2:15 AM IST (Updated: 6 Aug 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தை போஸ் மகன் சண்முகநாதன்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தை போஸ் மகன் சண்முகநாதன் (வயது 30). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமலைச்செல்வன்(38) என்பவருக்கும் இடையே கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன் மதுபாட்டிலால் சண்முகநாதனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலைச்செல்வனை கைதுசெய்தனர்.


Next Story