மைசூரு தாலுகாவில் சம்பவம் காவிரி ஆற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை யார் அவர்கள்? போலீஸ் விசாரணை
மைசூரு தாலுகாவில், காவிரி ஆற்றில் குதித்து ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மைசூரு,
மைசூரு தாலுகாவில், காவிரி ஆற்றில் குதித்து ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் ஜோடி தற்கொலைமண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் அமைந்துள்ளது கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை. இந்த அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு காதல் ஜோடி பிணமாக மிதந்தன. அவர்கள் பிணமாக மிதந்த சாகரகட்டே என்ற இடம் மைசூரு தாலுகா இலவாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த இலவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த காதல் ஜோடியின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது மட்டும் தெரிந்தது. மேலும் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகரகட்டே அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் மீதிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணைஇதையடுத்து போலீசார் அந்த காதல் ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மைசூரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.