மாவட்ட செய்திகள்

கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை + "||" + Murder of a Young Men in the well? Police investigation

கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
செஞ்சி அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஞ்சி,செஞ்சி அருகே அப்பம்பட்டு கிராமத்தில் ஒரு விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. தண்ணீரின்றி வறண்டு கிடந்த இந்த கிணற்றில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த வாலிபர் சிகப்பு நிற டிசர்ட் அணிந்திருந்தார். அவருடைய முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அதனால் அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை

இதையடுத்து போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.