மாவட்ட செய்திகள்

பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின் புதிய மேயராக ராகுல் ஜாதவ் தேர்வு ஆட்டோ டிரைவராக இருந்தவர் + "||" + Pembry-Sinjvad Corporation New mayor Rahul Jadhav's choice The auto driver

பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின் புதிய மேயராக ராகுல் ஜாதவ் தேர்வு ஆட்டோ டிரைவராக இருந்தவர்

பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின்
புதிய மேயராக ராகுல் ஜாதவ் தேர்வு
ஆட்டோ டிரைவராக இருந்தவர்
பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின் மேயராக தேர்வு ஆன ராகுல் ஜாதவ் ஆட்டோ டிரைவராக இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார்.
மும்பை,

பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின் மேயராக தேர்வு ஆன ராகுல் ஜாதவ் ஆட்டோ டிரைவராக இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார்.

மேயர் தேர்தல்

புனே மாவட்டத்தில் பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி உள்ளது. இந்த மாநகராட்சியில் மேயராக இருந்த பா.ஜனதாவை சேர்ந்த நிதின் கலிஜே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்ய நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதாவின் மேயர் வேட்பாளராக ராகுல் ஜாதவ் நிறுத்தப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பிலும் மேயர் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருந்தார். மொத்தம் உள்ள 120 கவுன்சிலர்களில் ராகுல் ஜாதவை 81 பேர் ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி மீண்டும் பா.ஜனதா வசமானது.

ஆட்டோ டிரைவர்

இதில் ருசிகரம் என்னவென்றால் மேயராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் ஜாதவ் ஆட்டோ டிரைவராக இருந்து மேயர் பதவியை எட்டிப்பிடித்து இருப்பது தான். 36 வயதான புதிய மேயர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

இதுபற்றி ராகுல் ஜாதவ் கூறுகையில், ‘நான் 1996 முதல் 2003-ம் ஆண்டு வரை பிழைப்புக்காக 6 இருக்கைகளை கொண்ட ஆட்டோவை ஓட்டி வந்தேன். இந்த வகை ஆட்டோ தடை செய்யப்பட்டதை அடுத்து விவசாயத்துக்கு திரும்பினேன். சிறிது நாட்களில் தனியார் நிறுவனத்தில் டிரைவர் வேலை கிடைத்தது. 2006-ம் ஆண்டு ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியில் சேர்ந்து பணியாற்றினேன். அடுத்த ஆண்டே அக்கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக கவுன்சிலர் ஆனேன். பின்னர் பா.ஜனதாவில் சேர்ந்து 2-வது முறை கவுன்சிலராகி, தற்போது மேயராக உயர்ந்து உள்ளேன். எனக்கு சாதாரண மக்களின் வலியும், போராட்ட வாழக்கையும் தெரியும். தொழில் நகரமான பிம்பிரி-சிஞ்ச்வாட்டில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவேன்’ என்றார்.