சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உடந்தை 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் கூடுதல் டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை
சட்டவிரோத மணல் கடத்தல் விவகாரத்தில் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
தானே,
சட்டவிரோத மணல் கடத்தல் விவகாரத்தில் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
மணல் கடத்தல்
தானே மாவட்டம் டிட்வாலா பகுதியில் சம்பவத்தன்று சட்டவிரோதமாக லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக தானே ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று மணல் கடத்தி சென்ற 3 லாரிகளை மடக்கி பிடித்து மணலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் டிட்வாலா போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சஞ்சய் துமால் ஊரக போலீசாரிடம் லாரிகளை விட்டு விடும் படியும், முறையாக வரி செலுத்தி மணலை கொண்டு செல்வதால் விசாரணை எதுவும் நடத்த தேவையில்லை எனவும் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து ஊரக போலீசார், துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரா மோரேயிடம் தெரிவித்தனர்.
பணி இடைநீக்கம்
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், டிட்வாலா போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சஞ்சய் துமால், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கோப்கர் ஆகியோர் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொங்கன் மண்டலம் கூடுதல் டி.ஜி.பி. நேவல் பஜாஜ்விற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன்பேரில் கூடுதல் டி.ஜி.பி. அவர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story