சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பயிற்சிப்பணி


சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பயிற்சிப்பணி
x
தினத்தந்தி 6 Aug 2018 1:04 PM IST (Updated: 6 Aug 2018 1:04 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லேப் அசிஸ்டன்ட், அட்டன்ட் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், பேக் ஆபீஸ் அசிஸ்டன்ட், எக்சிகியூட்டிவ், செக்யூரிட்டி கார்டு போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

8,10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பி.எஸ்சி., பி.காம், பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பி.ஜி.டிப்ளமோ, எம்.சி.ஏ, சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., எம்.எப்.சி. போன்ற படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.cpcl.co.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story