மாவட்ட செய்திகள்

திருவட்டார் அருகே விபத்து பஸ் மோதி தொழிலாளி பலி + "||" + Accident bus collision worker near Thiruvattar

திருவட்டார் அருகே விபத்து பஸ் மோதி தொழிலாளி பலி

திருவட்டார் அருகே விபத்து பஸ் மோதி தொழிலாளி பலி
திருவட்டார் அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.
திருவட்டார்,

திருவட்டார் அருகே செறுகோல், கடமனான்குழியை சேர்ந்தவர் தங்கையன். இவருடைய மகன் அனில்குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவர், நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஆற்றூருக்கு புறப்பட்டார். அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.


கல்லுப்பாலம் பகுதியில் வந்த போது, மார்த்தாண்டத்தில் இருந்து பெருஞ்சாணிக்கு சென்ற அரசு பஸ், அனில்குமார் மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதியது. இதில் அனில்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

விபத்து நடந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் கூடினர். அவர்கள் அனில்குமாரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அனில்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு
நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.
3. இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. உசிலம்பட்டி அருகே விபத்தில் 2 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பலி; அதிர்ச்சியில் ஒருவரது தாயும் இறந்த பரிதாபம்
உசிலம்பட்டி அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் பலியானார்கள். அதிர்ச்சியில் அவர்களில் ஒருவரது தாயும் உயிரிழந்தார்.
5. மாணவி மாடியில் இருந்து குதித்து சாவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்
செல்போன் உபயோகித்ததை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்தார். இதையொட்டி மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை