8 வழி சாலை திட்டத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 31 பேர் கைது
சேலம்–சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரூர் கச்சேரி மேட்டில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது.
அரூர்,
சேலம்–சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரூர் கச்சேரி மேட்டில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை மாநில துணை தலைவர் துளசிமணி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தேவராஜன், துணை செயலாளர் தமிழ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கோபால், முருகன், மாதேஸ்வரன், விஸ்வநாதன், நடராஜன், வெங்கடாசலம், செங்கொடி, ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story