அடிப்படை வசதி கோரி காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்


அடிப்படை வசதி கோரி காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 8:06 PM GMT)

விருதுநகர் அருகே அடைப்படை வசதிகள் செய்து தரக்கோரி குல்லூர் சந்தை கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை கிராமத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடைப்படை வசதிகள் செய்து தரக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள்காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:–

குல்லூர்சந்தை கிராமத்தில் பல சமூகத்தை சேர்ந்த 700 குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் ஆகியவை செய்து தரப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதி இன்றி சிரமப்படும் எங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வசதி இன்றி பெரும் தவிப்புக்குள்ளாகி வருகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story