மாவட்ட செய்திகள்

நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி மாநிலங்களவை உறுப்பினருக்கு மனு + "||" + The request to the Rajya Sabha member to allocate additional building for the library

நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி மாநிலங்களவை உறுப்பினருக்கு மனு

நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி மாநிலங்களவை உறுப்பினருக்கு மனு
நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரெங்கராஜனுக்கு குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
குளித்தலை,

குளித்தலையில் உள்ள கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரெங்கராஜனுக்கு குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-


குளித்தலை நகரப்பகுதியில் உள்ள கிளை நூலகம் பழமையான நூலகமாகும். இதில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கிறது. இருப்பினும் இட நெருக்கடி காரணமாக போட்டி தேர்வுகளுக்கு இங்குள்ள நூல்களை எடுத்து இங்கு அமர்ந்து படிக்கமுடியவில்லை. இந்த நூலகத்திற்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட இடம் இருந்தும் இதுவரை புதிய கட்டிடங்கள் கட்டப்படாமலேயே உள்ளது. இதனால் குளித்தலை பகுதி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்கால நலன் கருதி குளித்தலை கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.