மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் போதைப்பொருள் விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை + "||" + In Bangalore Drug seller gang Heavy action

பெங்களூருவில் போதைப்பொருள் விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை

பெங்களூருவில் போதைப்பொருள் விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை
பெங்களூருவில் போதைப்பொருள் விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சுனில்குமாரிடம் பா.ஜனதாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு,

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அசோக் தலைமையிலான பா.ஜனதாவினர் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் கமிஷனர் சுனில்குமாரை சந்தித்து பேசினார்கள். அப்போது பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், பெங்களூரு புறநகரில் போதைப்பொருட்கள் தயாரித்து பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அதனால் போதைப்பொருள் விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை போலீஸ் கமிஷனர் சுனில்குமாரிடம் பா.ஜனதாவினர் கொடுத்தனர்.


பின்னர் பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியை சுற்றி போதைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பெங்களூரு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் விற்கப்பட்டு வருகிறது. பிற மாநிலத்திற்கும் பெங்களூருவில் இருந்து தான் போதைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே சட்டசபை கூட்டத்தொடரில் போதைப்பொருள் விற்கும் கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பா.ஜனதா தெரிவித்தது.

ஆனாலும் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. அதனால் தான் போதைப்பொருள் விற்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதா சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் உடனடியாக அந்த கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அசோக் கூறினார்.