கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:39 PM GMT (Updated: 6 Aug 2018 11:39 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மும்பை,

7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்த வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி, 1 லட்சத்து 80 ஆயிரம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் பாதிக்க உள்ளது.

இதுகுறித்து மராட்டிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர் மிலிந்த் சர்தேஷ்முக் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார். இதேபோல மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி எங்களது வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும். இந்த வேலைநிறுத்தத்தில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இடம்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story