மாவட்ட செய்திகள்

சோளத்தட்டை படப்புக்கு தீ வைப்பு + "||" + Fire deposit for cornstarch

சோளத்தட்டை படப்புக்கு தீ வைப்பு

சோளத்தட்டை படப்புக்கு தீ வைப்பு
குஜிலியம்பாறை அருகே சோளத்தட்டை படப்புக்கு தீ வைப்பு. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜிலியம்பாறை, 

குஜிலியம்பாறை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 34). விவசாயி. இவர் கால்நடை தீவனமான சோளத்தட்டையை வீட்டின் அருகே சிறிது தூரத்தில் அடைந்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோளத்தட்டை படப்பில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட ராமன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் சோளைத்தட்டை படப்பு முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து ராமன், குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்தார். அதில் தனது சோளத்தட்டை படப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.