மாவட்ட செய்திகள்

தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி கலெக்டரிடம் மனு + "||" + Tuticorin Sterlite plant The petition requested to reopen

தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி கலெக்டரிடம் மனு

தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி தொழிற்சாலைகளுக்கான உதிரிபாகங்கள், மூலப்பொருட்கள் வழங்குவோர் சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொழிற்சாலைகளுக்கான உதிரிபாகங்கள், மூலப்பொருட்கள் வழங்குவோர் சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் வினியோகம் செய்து வருகிறோம். சமீபகாலமாக தூத்துக்குடியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களில் சில தனியார் அனல்மின் நிலையங்கள் சரிவர இயக்கப்பட வில்லை. ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து எங்கள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை குறைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வேலைவாய்ப்பின்மையை போக்க அரசு தொழிற்சாலைகளை ஊக்குவித்து வருகிறது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.