குறுக்குச்சாலை அருகே உள்ள பெரியகுளம் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் மக்கள் கலெக்டரிடம் மனு


குறுக்குச்சாலை அருகே உள்ள  பெரியகுளம் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Aug 2018 3:00 AM IST (Updated: 7 Aug 2018 5:53 PM IST)
t-max-icont-min-icon

குறுக்குச்சாலை அருகே உள்ள பெரியகுளம் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

குறுக்குச்சாலை அருகே உள்ள பெரியகுளம் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனு

குறுக்குச்சாலை, வேலாயுதபுரம், பெரியநத்தம், சிந்தலக்கட்டை மற்றும் சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நாங்கள் குறுக்குச்சாலை, வேலாயுதபுரம், பெரியநத்தம், சிந்தலக்கட்டை மற்றும் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் சரிவர விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. எங்கள் ஊரில் உள்ள பெரியகுளத்தை தூர்வாரி தண்ணீர் தேக்கினால், அதனை சுற்றி உள்ள 30 கிராம மக்கள் பயன் பெறுவார்கள். இதனால் பெரிய குளத்தை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம்.

நடவடிக்கை

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்தார். ஓட்டப்பிடாரம் தாசில்தார் மூலம் குளம் தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடந்து வந்தன.

இந்த நிலையில் சிலர் பணிகள் நடைபெறாமல் தடைபோட்டு வருகின்றனர். எங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் தடைகளை களைந்து தூர்வாரும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Next Story