தேவேந்திரகுல வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும் புதிய தமிழகம் கட்சி மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்
தேவேந்திரகுல வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி,
தேவேந்திரகுல வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் அணி மாநாடு
குற்றாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மகளிர் அணி மாநாடு நடந்தது. கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து விலக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும். இந்த கோரிக்கையை வருகிற அக்டோபர் மாதம் 6–ந்தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டும். இல்லையெனில் புதிய தமிழகம் கட்சி சார்பில், அறிவிக்கப்படும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் அனைத்து கிராமங்களில் இருந்தும் திரளான பெண்கள் கலந்து கொள்வது.
வேளாண்மை தொழிலில் நேரடியாக ஈடுபடும் தேவேந்திரகுல வேளாளர் பெண்களின் உடல்நலம் பேணவும், அவர்களின் பொருளாதாரம், தொழில், திறன் மேம்பாட்டுக்காக தேவேந்திரகுல வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் இரு கட்சி ஆட்சி முறையை ஒழிக்கும் வகையில், வருகின்ற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சி தலைமையில், ஒரு வலுவான அணியை உருவாக்கவும், அந்த அணியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தவும் உறுதி ஏற்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story