மதுராந்தகம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


மதுராந்தகம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Aug 2018 3:45 AM IST (Updated: 8 Aug 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழையனூர் சாலை கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அந்த பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி, தங்கராஜ் படாளம் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story