மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை + "||" + Women's blockade of the Panchayat Union office to emphasize various demands

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவரங்குளம்,

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், தெட்சிணாபுரம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள சிலர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியபோது அவர்கள் வேலை செய்ததற்கான சம்பளம் கொடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக சம்பளத்தை வங்கி கணக்கில் ஏற்ற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கவேண்டும், ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகளைசரிசெய்ய வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி பெண்கள் நேற்று திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.