மாவட்ட செய்திகள்

தஞ்சையை சேர்ந்த அ.ம.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு போலீசில் புகார் + "||" + DMK from Tanjore The lawyer's division secretary complained to the police car glass breakage police

தஞ்சையை சேர்ந்த அ.ம.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு போலீசில் புகார்

தஞ்சையை சேர்ந்த அ.ம.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு போலீசில் புகார்
தஞ்சையை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல் பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,

தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வேலுகார்த்திகேயன். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல்பிரிவு மாநில செயலாளராக உள்ளார். மன்னார்குடிக்கு டி.டி.வி.தினகரன் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வந்தார். பின்னர் அவரை தஞ்சைக்கு அழைத்து வருவதற்காக வேலுகார்த்திகேயன் தனது காரில் சென்றார்.


காரை தஞ்சை ரெட்டிப்பாளையம் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபு (வயது32) ஓட்டிச்சென்றார். மன்னார்குடி சென்று டி.டி.வி. தினகரனை அழைத்துக்கொண்டு தஞ்சை நோக்கி வந்துகொண்டிருந்தார். மன்னார்குடியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் வேலுகார்த்திகேயனின் காரின் பின்பக்க கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்தார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.

இது குறித்து பிரபு மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மன்னார்குடியை சேர்ந்த வடிவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.