மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
மயிலாடுதுறையில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், நாகை மாவட்ட கார், வேன், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கம் சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மயிலாடுதுறையில் ஆட்டோக்கள், வேன்கள், லோடு ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை.
மயிலாடுதுறையில் நாகை மாவட்ட கார், வேன், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடியில் வசூல் செய்வதை கைவிடவேண்டும். மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கக்கூடாது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் என்ற பெயரால் இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனி.மணி, சிறுவிற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு, மின்வாரிய தொழிற்சங்க திட்ட செயலாளர் கலைச்செல்வன், கூட்டு நடவடிக்கைக்குழு செயலாளர் ராயர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் மயிலாடுதுறையில் ஆட்டோ, கார், வேன்கள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகள், பெயிண்டர், எலக்ட்ரிசீயன், வெல்டர், டிங்கர், வாகனங்களின் டயர்களுக்கு பஞ்சர் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story