மாவட்ட செய்திகள்

பொறையாறு அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் + "||" + The college students dropped out of college near Dharaiyar and darna fight

பொறையாறு அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்

பொறையாறு அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்
பொறையாறு அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறையாறு,

பொறையாறு அருகே காழியப்பநல்லூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். மாணவ சேர்க்கையில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் வசூல் செய்ய வேண் டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும். கல்லூரி பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாணவிகள் குங்குமப்பொட்டு வைத்து வரக்கூடாது என்று கூறுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், மேற்கண்ட இடத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடமும், தனியார் கல்லூரி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.