மாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் சாவு


மாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2018 3:00 AM IST (Updated: 8 Aug 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் இறந்துள்ளனர்.

மயிலம், 


மயிலம் அருகே சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). முன்னாள் தி.மு.க. அவைத்தலைவர். இவர் நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்த செய்தியை மதியம் 3.30 மணி அளவில் டி.வி. யில் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் கருணாநிதி உடல்நிலை பற்றி குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கிருஷ்ணன் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதே போல் நேற்று முன்தினம் கருணாநிதி உடல்நிலை குறித்த டி.வி. செய்தியை விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் வார்டு பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) என்பவர் தனது வீட்டில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் இறந்தார். 

Next Story