மின்சார ரெயிலில் துப்பாக்கி தோட்டா மீட்பு விராரில் பரபரப்பு
மின்சார ரெயிலில் இருந்து துப்பாக்கி தோட்டா மீட்கப் பட்டது. இதனால் விரார் ரெயில் நிலையத் தில் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள விரார் ரெயில் நிலையத்தில் இருந்து தாதருக்கு தினமும் மாலை 4.03 மணிக்கு விரைவு ரெயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் விராரில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. இதில் ரெயிலின் ஒரு பெட்டி வாசல் பகுதியில் பிளாஸ்டிக் பை பார்சல் ஒன்று கிடந்தது. இதுகுறித்து பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு சென்று பிளாஸ்டிக் பையை மீட்டு சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் 9 எம்.எம். துப்பாக்கி தோட்டா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசார் ரெயிலில் இருந்த பயணிகளை கீழே இறக்கினர். பின்னர் ரெயிலில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் ரெயிலில் வேறு வெடிப்பொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த ரெயில் அங்கு இருந்து புறப்பட்டு சென்றது.
இந்தநிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் ரெயிலில் துப்பாக்கி தோட்டாவை போட்டு சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சார ரெயிலில் துப் பாக்கி தோட்டா மீட்கப்பட் டதால் விரார் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story