மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு + "||" + Near Kovilpatti The teenager ignited and committed suicide

கோவில்பட்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு

கோவில்பட்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு
கோவில்பட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை இல்லை

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 26). இவர் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

தீக்குளித்தார்

இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் லட்சுமி மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் லட்சுமி நேற்று முன்தினம் தன்னுடைய கணவரின் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் குளியலறையில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

சாவு

அவருடைய அலறல் சத்தம் கேட்டு, காளிதாஸ் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.