புதுப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 4 பெண்கள் கைது


புதுப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 4 பெண்கள் கைது
x
தினத்தந்தி 9 Aug 2018 3:00 AM IST (Updated: 8 Aug 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், செல்வம் ஆகியோர் புதுப்பேட்டை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிறுவத்தூர் கிராமத்தில் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்ததாக சுப்பிரமணி மனைவி ரங்கநாயகி (வயது 40), ராதாகிருஷ்ணன் மனைவி கலா (60) மற்றும் மணப்பாக்கத்தில் சாராயம் விற்ற லட்சுமி (40), ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள் (45) ஆகிய 4 பெண்களை போலீசார் கையும் களவுமுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 220 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story