மாவட்ட செய்திகள்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி + "||" + DMK and civic people for Karunanidhi's death in Ariyalur and Perambalur districts

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. கிளை செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையில், பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கருணாநிதி உருவப்படத்தை கையில் ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் செங்குந்தபுரத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வி.கைகாட்டியிலும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிறுகுடல் கிராமத்தில் தி.மு.க. சார்பில் 18 பேர் மொட்டையடித்து, அப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் சென்றனர்.

வேப்பூர் கிராமத்தில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமையில், கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சமுத்து தலைமையில், தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ராயக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும்: வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக மோசடிக்கு முயற்சி
புதுவையில் வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக கூறி மோசடி செய்ய முயற்சி நடந்து வருகிறது.
3. கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
4. 2 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் உயர் கோபுர மின்விளக்கு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2 ஆண்டுகளாக உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து காணப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. விபத்துக்கு வழிவகுக்கும் திருவாடானை– ஓரியூர் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விபத்துக்கு வழிவகுக்கும் திருவாடானை –ஓரியூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.