மாவட்ட செய்திகள்

வருவாய், பயணிகள் வருகை குறைவு: மாந்துறை ரெயில் நிலையத்தை மூட முடிவு + "||" + Revenue and passenger arrivals are low: Mantra Railway Station

வருவாய், பயணிகள் வருகை குறைவு: மாந்துறை ரெயில் நிலையத்தை மூட முடிவு

வருவாய், பயணிகள் வருகை குறைவு: மாந்துறை ரெயில் நிலையத்தை மூட முடிவு
வருவாய் மற்றும் பயணிகள் வருகையின் குறைவு காரணமாக மாந்துறை ரெயில் நிலையத்தை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.
திருச்சி,

ரெயில்வேயில் பயணிகள் ரெயில்கள் மட்டும் நின்று செல்லக்கூடிய வகையில் சிறிய ரெயில் நிலையங்கள் பல உள்ளன. இதில் போதுமான வருவாய் இல்லாத ரெயில் நிலையங்களை ரெயில்வே நிர்வாகம் மூடி வருகிறது.

அந்த வகையில் திருச்சி கோட்டத்தில் சிறிய ரெயில் நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் வருவாய் எந்த சிறிய ரெயில் நிலையங்களில் குறைவாக இருக்கிறது என்பதை கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர். இதில் சில ரெயில் நிலையங்களில் வருவாய் மற்றும் பயணிகள் வருகை மிக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளுக்கு திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கடிதம் எழுதினர்.


இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை ரெயில் நிலையத்தை மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

மாந்துறை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருக்கிறது. பயணிகள் வருகை இல்லாததால் வருவாயும் குறைந்துள்ளது. இதனால் அந்த ரெயில் நிலையத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளன. மாந்துறை ரெயில் நிலையத்தில் திருச்சி-லால்குடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வ.எண் 76803/76804), திருச்சி-விருத்தாசலம் பயணிகள் ரெயில் (வ.எண்76846/76845), சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் திருச்சி- லால்குடி பயணிகள் ரெயில் (வ.எண் 76800) ஆகியவை மட்டும் நின்று செல்கிறது.

திருச்சி-லால்குடி பயணிகள் ரெயில் சேவை கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம் பயணிகள் ரெயில் மட்டும் தினமும் நின்று செல்கிறது. அந்த ரெயிலையும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மாந்துறை ரெயில் நிலையம் மூடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 


தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் மற்றொரு ரெயில் என்ஜின்மீது அதிவேக ரெயில் மோதி விபத்து; 9 பேர் பலி
துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து, நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகருக்கு ஒரு அதிவேக ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
2. பட்டாசு தொழிலாளர்கள் மறியல் செய்யப்போவதாக தகவல்: திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு
பட்டாசு தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலால் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
3. ரெயில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
வேலை தேடி மும்பை வந்த வாலிபர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
4. கன்னியாகுமரி நினைவு மண்டபத்தில் கூடுதலாக காந்தியின் அரிய புகைப்படங்கள் சுற்றுலா பயணிகள் வரவேற்பு
கன்னியாகுமரி நினைவு மண்டபத்தில் கூடுதலாக காந்தியின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
5. திருவண்ணாமலை அருகே ஓடும் ரெயிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண் நடுவழியில் அபாய சங்கிலியை இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
மன்னார்குடியில் இருந்து திருப்பதி சென்ற ரெயிலில் ரத்த வெள்ளத்தில் பெண் பிணமாக கிடந்தார். அந்த ரெயிலில் சென்றவர்கள் அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏறபட்டது.