கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை எடியூரப்பா பேட்டி
கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அது எங்களுக்கு அவசியமும் இல்லை. அவசர கூட்டத்தில் பங்கேற்கவே நான் டெல்லி சென்று இருந்தேன். பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினேன்.
நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்து கூட்டணி அரசுக்கு எதிராக போராடுவோம். உள்ளாட்சி தேர்தலையொட்டி எனது பிரசாரத்தை நாளை(இன்று) பீதரில் தொடங்குகிறேன். உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சில மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. அதுகுறித்தும் நான் ஆய்வு நடத்த உள்ளேன்.
கருணாநிதியின் மறைவு எனக்கு மன வேதனையை கொடுத்துள்ளது. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறப்பதில் கருணாநிதி முக்கிய பங்கு ஆற்றினார். அப்போது அவர் என்னுடன் பேசியதை என்னால் மறக்க முடியாது. அவருடைய ஆத்மா அமைதி பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story