மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 4:59 AM IST (Updated: 9 Aug 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் மீது மர்ம மனிதர்கள் கல்வீசி கண்ணாடியை உடைத்தனர்.

விழுப்புரம், 


விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் மீது மர்ம மனிதர்கள் கல்வீசி கண்ணாடியை உடைத்தனர். அதன்படி மயிலம் அருகே தழுதாளி, மணலூர்பேட்டை அருகே விளந்தை, விக்கிரவாண்டி அருகே பேரணி கூட்டுசாலை, ஒலக்கூர் பஸ் நிறுத்தம், திண்டிவனம் அருகே சலவாதி ஆகிய இடங்களில் சென்று கொண்டிருந்த தலா ஒரு அரசு பஸ்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் 2 அரசு பஸ்கள், திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தையில் ஒரு அரசு பஸ் என்று 8 இடங்களில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.

இதேபோல் எலவனாசூர்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள் மற்றும் 2 கார்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விளந்தையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக மணலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் ராமசந்திரன் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Next Story