மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி தொழிலாளி உள்பட 3 பேர் காயம்


மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி தொழிலாளி உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Aug 2018 2:30 AM IST (Updated: 9 Aug 2018 8:45 PM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். தொழிலாளி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

இட்டமொழி, 

மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். தொழிலாளி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

தொழிலாளி 

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கோடன்குளத்தை சேர்ந்தவர் செல்வின் (வயது 25). இவர் மும்பையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்திருந்தார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் உன்னங்குளத்திற்கு சென்று விட்டு தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பலம் பஸ் நிறுத்தம் அருகே செல்வின் வந்தபோது ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

பலி 

உடனே அவரை செல்வின் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் அரசனார்குளம் அருகே வந்தபோது, அங்கு தெய்வநாயகபேரியை சேர்ந்த பெருமாள் (40), மணிகண்டன் (35) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், செல்வின் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்தவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் செல்வின், பெருமாள், மணிகண்டன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story