2021-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பு


2021-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 4:15 AM IST (Updated: 10 Aug 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மேம்படுத்து வதற்கான பணிகள் குறித்த பயிற்சி வகுப்பை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்,

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மேம்படுத்து வதற்கான பணிகள் குறித்த பயிற்சி வகுப்பை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தேசிய மக்கள் தொகை பதிவேடுகளுக்கான பணிகள் 2010-ம் ஆண்டு வட்ட, நகராட்சி வாரியாக மேற்கொள்ளப்பட்டு குடும்ப பட்டியல் வெளியிடப்பட்டது. மேற்படி குடும்ப பட்டியலில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் புத்தகங்களாக அச்சிடப்பட்டு, 2016-ம் ஆண்டில் களப்பணிகள் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சுருக்கப்பட்டியல் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல்கள் 2010-ம் ஆண்டிற்கான குடும்ப பட்டியலுடன் ஒப்பிட்டு தனி நபர் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை தற்போது இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இப்பணிகள் விரைவாகவும், சரியாகவும் மேற்கொள்ள வட்ட, நகராட்சி அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பு அலுவலர்களுக்கு தனித்தனியாக யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு உருவாக்கபட்டு, தகவல் குறிப்பு ஏற்றுபவர்கள் மூலமாக தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். 2021-ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்கண்ட பணிகள் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றார். இதனை தொடர்ந்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையர் மற்றும் தகவல் குறிப்பு ஏற்றுபவர்கள் ஆகியோர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மேம் படுத்துவதற்கான பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு ஒருங் கிணைப்பாளர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) லாசரால் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சேது ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story