மது விற்ற மூதாட்டி உள்பட 3 பேர் கைது


மது விற்ற மூதாட்டி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2018 3:45 AM IST (Updated: 10 Aug 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி (வயது 48) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அன்புமணியை கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெண் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுபாட்டில்களை விற்றது ஸ்ரீபுரந்தான் தெற்கடி தெருவை சேர்ந்த பார்வதி (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பார்வதியை கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தா.பழூரில் மது விற்ற இடையாறு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை தா.பழூர் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story