அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:15 PM GMT (Updated: 9 Aug 2018 7:13 PM GMT)

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் நடந்தது.

பொன்னேரி,

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.  மாவட்ட அ.தி.மு.க. அவைதலைவர் தீபகண்ணன், இணைசெயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் மோகனவடிவேல், கார்மேகம், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட இளைஞர்அணி செயலாளர் பானுபிரசாத் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன், எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மது விலக்கு, மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற தேர்தல் பணிக்குழு மற்றும் பூத்கமிட்டிகள் அமைப்பது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், திருவள்ளூர் மாவட்ட பேரவை தலைவர் பரிமேலழகன், முன்னாள் மாவட்ட குழுதலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story