சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 10 Aug 2018 4:15 AM IST (Updated: 10 Aug 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

திருவாரூர்,

சுதந்திரதினம் வருகிற 15-ந்தேதி(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அசம் பாவித சம்பவங்களும் நடை பெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ரெயில் நி்லையம், தண்டவாளம் போன்ற இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று மாலை காரைக்காலில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரெயிலை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையில் ஏட்டுக்கள் ராஜ்மோகன், சுரேஷ், சித்ரா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் பயணிகள் உடமைகளை மெட்டல் டிடெக்கர் கருவி உதவியுடன் சோதனை செய்தனர்.

அப்போது சந்்தேகத்துக் குரிய வகையில் கிடக்கும் பொருட்களை பயணிகள் யாரும் தொட வேண்டாம். அருகில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு ரெயில்வேத்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பயணிகளும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விழிப்புணர்வு செய்தனர். 

Next Story