திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
விருத்தாசலத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மேட்டுகாலனியை சேர்ந்த இளையராஜாவுக்கும், பட்டிகுடிகாடு கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகள் ரம்யாகிருஷ்ணனுக்கும்(வயது 22) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரம்யாகிருஷ்ணன் இருந்த அறை, நேற்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்காததால் இளையராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் ரம்யாகிருஷ்ணன் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா, உடனடியாக வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி அவரும் விரைந்து வந்தார். இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று ரம்யாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story