மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை + "||" + For students Remove the worm The operation to deliver the tablet

மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை

மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை
பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கேசவன் தெரிவித்தார்.
காரைக்கால்,

வளர்இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை, இந்த ஆண்டின் இரண்டாம் கட்டமாக வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட சார்பு ஆட்சியர் விக்ராந்த்ராஜா, முதன்மைக்கல்வி அதிகாரி அல்லி, நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், நகராட்சி ஆணையர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், கலெக்டர் கேசவன் பேசும்போது, “வளர் இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மேம்பட குடற்புழு நீக்க மாத்திரை வழங்க அரசு முடிவு செய்து ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த மாத்திரை வழங்கல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆகஸ்டு 10-ந் தேதியும் (இன்று), 17-ந் தேதியும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள், பள்ளி செல்லாத குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக இந்த மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி
நாக்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள துர்கா நகரை சேர்ந்தவர் பரிதோஷ் சுரேஷ் (வயது 27). இவர் பயோ-டெக்னாலஜி பிரிவில் பட்டதாரி ஆவார். அரசு வேலைக்காக தேர்வு எழுத தயாராகி வந்தார்.
2. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல்
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று (வெள்ளிக் கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.