மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் + "||" + Dharmapuri for the disabled Special Care Meeting

தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார்.


இந்த கூட்டத்தில் அரசு வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பசுமை வீடு, இலவச வீட்டு மனை பட்டா, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 3 சக்கர வண்டி, ஊன்று கோல் மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 42 மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் அளித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான ஆய்வு குழு மூலம் வயது வரம்பினை தளர்வு செய்து உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 91 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக பாதுகாப்புதிட்ட தனித்துணை கலெக்டர் முத்தையன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, எலும்பு முறிவு காது, மூக்கு தொண்டை, கண் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டர்கள், மனநல டாக்டர்கள், தாசில்தார்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.