மாவட்ட செய்திகள்

திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு + "||" + Will the dam be constructed in a building near Thirumurugam? - Farmers expectation

திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பெரியகண்ணமங்கலம், குரும்பேரி, சின்ன கண்ணமங்கலம், கொட்டாரக்குடி, பெருஞ்சாத்தாங்குடி, கரம்பை ஆகிய பகுதிகளில் வளப்பாற்றின் மூலம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. இந்த பகுதியில் ஆற்றில் இருந்து சாகுபடி செய்ய போதுமான தண்ணீர் கிடைப்பது இல்லை என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தற்போது கடைமடை பகுதிக்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் வளப்பாற்றில் போதுமானதாக இல்லை எனவும், இதனால் சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்க வில்லை என்பதால் பெரியகண்ணமங்கலத்தில் வளப்பாற்றில் ஒரு படுக்கை அணை அமைத்து தரவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறையினர் அப்பகுதி வடிகால்களை தூர்வாரி வரும் பெரியகண்ணமங்கலம் வளப்பாற்றில் ஒரு படுக்கை அணை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தரக்கோரி பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
2. கடலூர் மாவட்டத்தில்: 58 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர் - அதிகாரி தகவல்
கடலூர் மாவட்டத்தில் 44,500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல்லுக்கு 58 ஆயிரத்து 288 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
3. லோயர்கேம்ப் பகுதியில்: மதுரை குடிநீர் திட்டப்பணிக்காக அதிகாரிகள் ரகசிய ஆய்வு - விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
லோயர்கேம்ப் பகுதியில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல தடுப்பணை அமைக்க உள்ள இடத்தை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் குழுவினர் ரகசியமாக ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் - முதல்மந்திரி குமாரசாமி பேச்சு
விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
5. திருமருகல் அருகே, குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் சாவு - போலீசார் விசாரணை
திருமருகல் அருகே குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.