பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்கு இனியஸ்டா 2015-ம் ஆண்டில் இருந்து கேப்டனாக செயல்பட்டார்.

* பெங்களூருவில் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்துள்ளது. ஹனுமா விஹாரி 138 ரன்கள் (நாட்-அவுட்) விளாசினார். பிரித்வி ஷா (16 ரன்), மயங்க் அகர்வால் (0) ஏமாற்றம் அளித்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


* ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்கு இனியஸ்டா 2015-ம் ஆண்டில் இருந்து கேப்டனாக செயல்பட்டார். சமீபத்தில் அவர் அந்த கிளப்பை விட்டு விலகி ஜப்பானின் விசெல் கோப் கிளப்பில் இணைந்தார். இதையடுத்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி நேற்று நியமிக்கப்பட்டார். துணை கேப்டன்களாக ஜெரார்டு பிக்யூ, செர்ஜி ராபர்ட்டோ ஆகியோர் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 26-24, 21-17 என்ற நேர்செட்டில் கனடா வீரர் செங் சியாவ்டாங்கை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 17-21, 21-19, 21-11 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஜோவ் ஸிகியை வென்றார்.