மாவட்ட செய்திகள்

விபத்தில் கணவன்- மனைவி சாவு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு, ஈரோடு கோர்ட்டு உத்தரவு + "||" + Husband and wife killed in crash: Compensation for the affected family, Erode Court order

விபத்தில் கணவன்- மனைவி சாவு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு, ஈரோடு கோர்ட்டு உத்தரவு

விபத்தில் கணவன்- மனைவி சாவு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு, ஈரோடு கோர்ட்டு உத்தரவு
விபத்தில் கணவன்- மனைவி இறந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஈரோடு,

சேலம் உடையப்பர் காலனியை சேர்ந்தவர் மனோஜ் ஜெயின் (வயது 39). இவர் டெல்லியில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சவிதா (32). இவர்களுக்கு சித்தார்த் (9), மனோ (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.


கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி மனோஜ் ஜெயின் தனது மனைவி, மகன்களுடன் டெல்லிக்கு விமானத்தில் செல்ல பெங்களூரு விமான நிலையத்திற்கு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அந்த கார் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபட்டணம்பிரிவு பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்துகொண்டு இருந்த சரக்கு வேன் ஒன்று வலதுபுறமாக திரும்பியபோது மனோஜ் ஜெயின் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் மனோஜ் ஜெயின், அவருடைய மனைவி சவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், சித்தார்த், மனோ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் விபத்தில் இறந்த மனோஜ் ஜெயினின் தந்தை மங்கில்லாள், தாய் சகுந்தலாதேவி, மகன்கள் சித்தார்த், மனோ ஆகியோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட 2-ம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், ‘மனோஜ் ஜெயினின்’ மரணத்திற்கு இழப்பீடாக ரூ.3 கோடியே 59 லட்சத்து 52 ஆயிரத்து 600, சவிதாவின் மரணத்திற்கு இழப்பீடாக ரூ.32 லட்சத்து 37 ஆயிரம், படுகாயம் அடைந்த சித்தார்த், மனோ ஆகியோருக்கு இழப்பீடாக தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 49 ஆயிரத்து 600 இழப்பீட்டு தொகையாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள் செந்தில்குமார், சங்கீதா ஆகியோர் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக அதிகபட்ச தொகையான சுமார் ரூ.4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது”, என்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கம்பம் அருகே: வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டியானை
கம்பம் அருகே வனப்பகுதியில் குட்டியானை இறந்து கிடந்தது.
2. வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் சாவு
வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தான்.
3. பாலிசி தவணைத்தொகையை வேறு பெயரில் வரவு வைத்த வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
பாலிசி தவணைத்தொகையை வேறு பெயரில் வரவு வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
திட்டக்குடி அருகே பெண் குழந்தையை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
5. மலேசியாவில் வேலை பார்த்த வாலிபர் மர்ம சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் கோரிக்கை
மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, புதுக்கோட்டை கலெக்டருக்கு, வாலிபரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.