நிலம் அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


நிலம் அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 11 Aug 2018 3:07 AM IST (Updated: 11 Aug 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை, 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சார்பில் முன்மாதிரியான போலீஸ் நிலையங்களை உருவாக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்து விளங்கும் காவல் நிலையங்களை ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர போலீஸ் நிலையம், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர போலீஸ் நிலையம் என 3 போலீஸ் நிலையங்கள் முதற்கட்டமாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 போலீஸ் நிலையங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக நிலம் அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ள நாக ஜோதியை தமிழக அரசு நியமித்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி நேற்று புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, காவல் நிலையத்தின் சுற்றுப்புற சூழல், பதிவேடு பரா மரிப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் செயல்பாடுகள், குற்ற வழக்குகளின் நிலுவை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து முதற்கட்டமாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள 3 போலீஸ் நிலையங்களையும் சூப்பிரண்டு நாகஜோதி ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு அறிக்கை அளிக்க உள்ளார். இதனை யடுத்து புதுடெல்லியில் இருந்து மீண்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் குழு முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 3 போலீஸ் நிலையங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story