மாவட்ட செய்திகள்

9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது + "||" + With 9 kg of cannabis 8 arrested for women

9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது

9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது
பாண்டுப்பில் 9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள கல்லூரிகள், ஓட்டல்கள் முன் ஒரு கும்பல் கஞ்சா விற்று வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பாண்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், சம்பவத்தன்று பாண்டுப்பில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் விஜய் (வயது26), முஸ்தபா(21), தாயாபாய்(21), ஜசுன்ந்தா(50), சக்தி புஜாரி(32), உத்தம்(46), கமலேஷ், சாய்பன்(21) என்பதும், இவர்கள் பாண்டுப், விக்ரோலி, பவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நங்கநல்லூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; என்ஜினீயர் கைது
நங்கநல்லூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லையால் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
2. ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் வழிப்பறி; 3 பேர் கைது
ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் செல்போனை பறித்துச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இருவேறு இடங்களில் ரூ.12 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : 2 பேர் கைது
மும்பை காட்கோபர்- மான்கூர்டு லிங் சாலையில் ஒருவர் போதைப்பொருளுடன் வருவதாக காட்கோபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
4. உரக்குடோன் ஊழியரை கொல்ல முயற்சி சுமைப்பணியாளர்கள் 4 பேர் கைது
திருச்சியில் உரக்குடோன் ஊழியரை கொல்ல முயன்ற வழக்கில் சுமைப்பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. மாமல்லபுரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை ஆட்டோ டிரைவர்; நண்பர் கைது
சூளேரிக்காட்டில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகே 14–ந்தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.